Last Updated on: 19th June 2023, 11:05 am
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், கிரீன கார்டுக்கு அப்ளை செய்யும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், கிரீன் கார்டுகளுக்கு அப்ளை செய்வது தொடர்பான விதிமுறைகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் வேலை செய்வதற்கும், கிரீன் கார்டு அப்ளை செய்ய காத்திருப்பவர்களுக்கும், கிரீன் கார்டு அப்ளை செய்து காத்திருப்பவர்களுக்கும் ஆன, கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டு, பிடன் நிர்வாகம் விதிகளைத் தளர்த்தியுள்ளது.
வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணத்திற்கான (EAD) ஆரம்ப மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கான தகுதி அளவுகோல்கள் தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வழங்கிய வழிகாட்டுதல்கள் மூலம் விசா விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வல்லுநர்கள் கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியிருப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க குடிவரவு சட்டப்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.40 லட்சம் பேருக்கு கிரீன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கிரீன் கார்டுகளில் அதிகபட்சம் 7% மட்டுமே குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
அதாவது 100 கார்டுகளை வழங்குகிறார்கள் என்றால் ஒரே நாட்டை சேர்ந்த 7 பேருக்கு மட்டுமே இந்த உரிமை கிடைக்கும். அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய ஒரு சமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விதியை அமெரிக்கா பின்பற்றுகிறது. அமெரிக்கா வந்த உடனேயே ஒருவரால் கிரீன் கார்டிற்கு நேரடியாக அப்ளை செய்ய முடியாது.
இந்த விண்ணப்பத்திற்கு அப்ளை செய்ய பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. அந்த அனைத்து நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே கிரீன் கார்டிற்கு அப்ளை செய்ய முடியும்.நடவடிக்கையை பாராட்டிய FIDSஇந்தியா மற்றும் இந்திய புலம்பெயர் ஆய்வுகள் அறக்கட்டளை (FIIDS) USCIS போன்ற ஒரு நடவடிக்கையை எடுத்ததற்காக பாராட்டியுள்ளது. FIDS படி, இந்த நடவடிக்கை அதிக எண்ணிக்கையிலான இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு உதவும்.