Last Updated on: 16th July 2023, 04:22 pm
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இம்மாநிலத்தில் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல் பகுதியில் ஏற்பட்ட அதிர்வு
அலாஸ்கா மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.