8.9 C
Munich
Friday, September 13, 2024

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம்: திருட்டில் இறங்கிய இளைஞர்கள்

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் பணவீக்கம்: திருட்டில் இறங்கிய இளைஞர்கள்

Last Updated on: 12th May 2023, 06:14 pm

பிரித்தானியாவில் வாழ்க்கைக்கு உண்டான அடிப்படை செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், 10 சதவிகித இளைஞர்கள் அங்காடிகளில் திருடுவதாக ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பொருளாதார நெருக்கடி.

பிரித்தானியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வதற்கான செலவு அதிகரித்து வருவதாகவும், அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் செலவு அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பதாக ஆய்வு சொல்கிறது. இதனால் பிரித்தானியாவில் உணவு பொருட்கள் விற்கும் பல் பொருள் அங்காடிகளில் அதிக அளவில் திருட்டு நடப்பதாக தெரிய வந்துள்ளது.

மெட்ரோ ஊடகம் அறிவித்த அறிக்கையின் படி 10% இளைஞர்கள் , குறிப்பாக சூப்பர் மார்கெட்டில் அதிகப்படியாக திருடுவதாகவும், இதற்கு காரணம் வாழ்க்கை செலவு அதிகரித்தது தான் எனவும் கூறியுள்ளனர்.

தொடரும் திருட்டு

பிரித்தானியாவின் பணவீக்கம் பல மாதங்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளதாகவும் (சமீபத்திய புள்ளிவிவரம் 10.4% ஆகும்), இதனால் உணவு மற்றும் எரிபொருள் செலவுகள் உச்சத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் குளிர்பானங்களில் விலை இந்த ஆண்டில் 19.1% என்ற அளவில் இரட்டிப்பாக அதிகரித்திருப்பதால், குடும்பங்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வது கடினமாக உள்ளதெனவும், அதிகப்படியான உணவுகளை இறங்குமதி செய்வது தான் காரணம் என தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ONS) சமீபத்திய தரவு  தெரிவிக்கிறது.

கடந்த செப்டம்பர் வரையிலான புள்ளியியல் விவரத்தின் படி, சூப்பர் மார்கெட்டில் திருட்டு நடைபெறுவது 22 சதவீதம் அதிகரித்து வருவதாக தி இன்டிபெண்டண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரட்டிஷ் கன்சோர்டியம் கடந்த ஆண்டு மட்டும் 7.9 மில்லியன் திருட்டு வழக்குகள் வந்திருப்பதாகவும், இது கடந்த 2017ஆம் ஆண்டினை விட ஐந்து மில்லியன் அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here