Last Updated on: 12th May 2023, 12:48 pm
லண்டன் பேருந்து சேவை மீண்டும் பணிக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், பெருந்தொற்று காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீள முடிவு செய்துள்ளதாகவே கூறப்படுகிறது.
பேருந்து நிலையக் கட்டுப்பாட்டாளர்லண்டன் பேருந்து சேவையானது தற்போது 102 பணியிடங்களை கொண்டுள்ளது. அதில் கால் பகுதி அனைத்தும் பயிற்சி நிலைகள் என கூறுகின்றனர். இதில் அதிக கவனத்தை ஈர்க்கும் வேலை வாய்ப்பு என கூறபப்டுவது பேருந்து நிலையக் கட்டுப்பாட்டாளர் பணி.
லண்டன் பேருந்து சேவையின் 620 வழித்தடங்களில் பேருந்துகளை தங்கு தடையின்றி இயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன். வாடிக்கையாளர்கள் சேவையிலும் அனுபவம் இருத்தல் வேண்டும்.மட்டுமின்றி பொறுப்பு ஏற்கும் முன்னர் 9 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பேருந்து நிலையக் கட்டுப்பாட்டாளர் பணியில் இருப்பவருக்கு இலவச பயண அனுமதி அளிக்கப்படுவதுடன், துவக்க ஊதியம் 37,222 பவுண்டுகள் எனவும், ஆறு மாதங்களுக்கு பின்னர் 38,789 பவுண்டுகள் என அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பணிக்கு தெரிவாகும் நபர் குரோய்டன் அல்லது ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியில் பணியாற்ற நேரலாம். லண்டன் பேருந்து சேவையில் இணைந்து பணியாற்ற விருப்பம் இருக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
இரண்டு வருடங்கள் நீடிக்கும் தொழிற்கல்வி:
லண்டன் பேருந்து சேவை நிறுவனம் பயிற்சி திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இதில் பேருந்து சேவை மட்டுமின்றி லண்டன் சுரங்க ரயில் சேவையிலும் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
பெரும்பாலானவை இரண்டு வருடங்கள் நீடிக்கும் தொழிற்கல்வி திட்டங்கள் என கூறுகின்றனர். ஆனால் ஒரு பதவியானது ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் இளங்கலை பட்டத்திற்கு சமமான நிலை 6 தகுதியை வழங்குகிறது.
லண்டன் பேருந்து சேவை இணைய பக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் லண்டன் பேருந்து சேவையானது வாலை வாய்ப்பு திட்டம் அனைத்தையும் முடக்கியிருந்தது.தவிர்க்க முடியாத சில பொறுப்புகளுக்கு மட்டும் புதிதாக ஆட்களை வேலைக்கு அமர்த்தினர்.
லண்டன் பேருந்து சேவையில் தற்போது 26,500 பேர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சுமார் 1,500 ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஏஜென்சி தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.