Last Updated on: 9th August 2023, 07:48 pm
ஆபத்தை உணராமல் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள்
இங்கிலாந்திலுள்ள Devon என்னுமிடத்தில் அமைந்துள்ள படகுத்துறை ஒன்றில் சில சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அலை பயங்கரமாக அடிக்கவே, சில சிறுமிகள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட, ஒரு சிறுமி மட்டும் அசட்டுத் துணிச்சலுடன் அங்கேயே நின்றுகொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது திடீரென பெரிய அலை ஒன்று வந்து அவளை இழுத்துச் சென்றுவிட்டது. அலையில் சிக்கி அவள் திணறிக்கொண்டிருந்ததைக் கண்ட சில அவளைக் காப்பாற்ற விரைந்துள்ளனர்.
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
ஒருவர் மிதக்கும் ரப்பர் வளையம் ஒன்றை எடுத்து வர, அதற்குள் மற்றொருவர் படகுத்துறையின் மற்றொரு பக்கம் உள்ள படிக்கட்டு வழியாகச் சென்று, லாவகமாக அந்தச் சிறுமியைத் தூக்கியதால் நிகழவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
படகுத்துறை அதிகாரிகள், இதுபோல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.