Last Updated on: 22nd August 2024, 11:03 am
உலகின் மிகவும் வயதான பெண் மரியா பிரான்யாஸ் மொரேரா என்பவர் 117 வயதில் காலமானார். இதையடுத்து ஜப்பானைச் சேர்ந்த 116 வயது டாமிகோ இடூகா உலகின் மிகவும் வயதாக பெண் என அறிவிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் சான்ஸ்பிரான்சிஸ்கோ நகரில் ஸ்பெயின் வாழ் அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த 117 வயது மரியா பிரான்யாஸ் மொரேரா, (1907-ல் பிறந்தவர்) உலகின் வயதான பெண் என 2023 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு இறந்தார்.
இவருக்கு அடுத்தபடியாக ஜப்பானைச் சேர்ந்த டாமிகோ இடூகா ( 1908-ம் ஆண்டு மே.23 ல் பிறந்தவர்) 116 வயதுடன் உயிருடன் வசித்து வருகிறார். இவர் உலகின் மிகவும் வயதான பெண் என அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் மலையேற்ற வீராங்கனை ஆவார். மேற்கு ஜப்பானில் ஆஸ்ஹியா நகரில் வசித்து வருகிறார்.