Last Updated on: 20th May 2023, 01:58 pm
டோக்கியோ: பொதுவாக ஜப்பான் எப்போதும் பங்ச்சுவாலிட்டிக்கு பெயர் பெற்றது. இதனிடையே அங்கே விமானம் தாமதமான நிலையில், ஏர்லைன் ஓனரே நேரடியாக ஏர்போர்ட்டுக்கு சென்ற சம்பமும் நடந்துள்ளது.
உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான ஜப்பான் சர்வதேச அளவிலும் முக்கியமான நாடாக இருக்கிறது.
பொருளாதாரம் மட்டுமின்றி, கலச்சாரா ரீதியாகவும் மிகவும் செழிப்பான ஒரு நாடாகவே ஜப்பான் இருக்கிறது. ஜப்பான் மக்கள் செல்வத்தை விட ஒழுக்கத்தை முக்கியமானதாகக் கருதுவார்கள்.
பங்ச்சுவாலிட்டி : ஜப்பான் மக்கள் வளர்க்கப்படும் போதே ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை முக்கியமானதாகச் சொல்லியே வளர்ப்பார்கள். அதேபோல ஜப்பான் நாட்டில் பங்ச்சுவாலிட்டியை மிக முக்கியமானதாகப் பார்ப்பார்கள். சொன்னால் சொன்ன நேரத்தில் இடத்திற்குச் சென்றுவிடுவார்கள். அங்கே இருக்கும் அனைத்து ரயில்கள், விமானங்கள் கூட பங்ச்சுவாலிட்டியில் பக்காவாக இருக்கும்.. ஒவ்வொரு ஆண்டும் பங்ச்சுவாலிட்டியில் ஜப்பான் ஏர்போர்ட்களே டாப்பில் இருக்கும்.அதேபோல ரயில்கள் சில நொடிகள் தாமதமானால் கூட மன்னிப்பு கேட்பார்கள். அல்லது டிக்கெட் தொகையைத் திரும்பவே அளிப்பார்கள். ஆனால், இப்போது அங்கே ஏர்லைன் ஓனர் செய்த செயல் பேசுபொருள் ஆகியுள்ளது.
ஜப்பானில் அங்கே பயணிகள் ஒரு விமானத்தில் நாள் முழுக்க எதிர்பாராத விதமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் அதிகபட்சம் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் தங்க ஏற்பாடுகள் மட்டுமே செய்யப்படும். ஆனால், இங்கே ஏர்லைன் ஓனரே நேரடியாகச் சென்று ஒவ்வொரு பயணியிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
என்ன நடந்தது: இந்தச் சம்பவம் இணையம் முழுக்க பேசுபொருள் ஆகியுள்ளது. ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸின் தலைவர் சாங் குவோ-வேய், ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் நரிடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட 308 பயணிகளிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில் ஏர்லைன் ஓனர், “உண்மையில் பலத்த காற்று காரணமாக ஒரு விமானம் தாமதமானது. அதில் பயணிக்க இருந்த அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் தொகை முழுமையாகத் திரும்பி அளிக்கப்படும்.. இரண்டாவது விமானம் விமான பராமரிப்பு சோதனையால் தாமதமானது. இதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று அவர் பேசும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
300 பயணிகள்: இப்படி அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் தாமதமானதால் சுமார் 300 பயணிகள் நரிடா சர்வதேச விமான நிலையத்திலேயே இரவை கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல் விமானம் மதியம் 3.45 மணிக்குப் புறப்பட இருந்தது. அடுத்த விமானம் 5.30 மணிக்குப் புறப்பட இருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் விமானம் நள்ளிரவு வரை புறப்படவில்லை. இரவு 11 மணிக்கு விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்ட போதும், விமானம் கிளம்பவில்லை. நள்ளிரவுக்குப் பின்னர் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் விமானத்திலேயே பல மணி நேரம் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்கள் விமான நிலையத்திலேயே அன்றைய தினத்தைக் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் ஸ்லிபின்ங் பேக்குகள் வரும் வரை யாரும் விமானத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை.இறுதியாக நள்ளிரவு 1 மணியளவில், பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமான நிலையத்திலேயே தூங்க வேண்டும் என அறிவுறுத்தினர். மறுநாள் காலை 6 மணிக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், காலை 8 மணி வரை விமானம் கிளம்பவில்லை.
ஏர்லைன் ஓனர்: இதனால் பயணிகள் கடும் கோபத்தில் இருந்தனர். இப்படி பாடாய் படுத்திய நிலையில்,பயணிகளிடம் மன்னிப்பு கேட்க குவோ-வேய் நேரடியாக விமான நிலையத்திற்கே வந்துவிட்டார்.
விமானம் முதலில் சொன்ன நேரத்தில் இருந்து சுமார் 16 மணி நேரம் கழித்தே கிளம்பியது. பயணிகளுக்குக் காலையில் உணவு, தண்ணீர் என எதுவும் ஏர்லைன் சார்பில் வழங்கப்படவில்லை.. அவர்கள் தங்கள் சொந்த காசில் காலை உணவை வாங்க வேண்டியிருந்தது.