8.9 C
Munich
Friday, September 13, 2024

ஒரு நாள் முதல்வன் பழசு.. ஒரு நாள் கணவன் தான் இப்போ டிரெண்ட்.! சீனாவை பாருங்க! காரணம் வினோதம் தான்

ஒரு நாள் முதல்வன் பழசு.. ஒரு நாள் கணவன் தான் இப்போ டிரெண்ட்.! சீனாவை பாருங்க! காரணம் வினோதம் தான்

Last Updated on: 15th August 2023, 08:57 am

பெய்ஜிங்: முதல்வன் திரைப்படத்தில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக வந்து நாம் பார்த்திருப்போம்.. ஆனால், சீனாவில் இங்கு ஒரு நாள் திருமணம் டிரெண்டாகி வருகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

கடந்த ஜூலை மாதம் வடக்கு சீனாவில் உள்ள கிராமம் ஒன்றில் கிராமத்துத் திருமணம் விழா ஒன்று நடைபெற்றது. இது பார்க்க வழக்கமான திருமண விழாவைப் போலவே இருந்தது.
அன்றைய தினம் அங்கு ஏகப்பட்ட மக்கள் குவிந்து இருந்தனர். அங்கு அந்த ஜோடி திருமணம் நடப்பதாக அறிவித்தனர். இருவரும் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பலரும் வாழ்த்தினர்.

திருமணம்: இருப்பினும், இதில் விஷயம் என்னவென்றால் இந்த திருமணம் வெறும் ஒரு நாள் மட்டுமே நீட்டிக்குமாம். சீனாவில் உள்ள ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் இதுபோல ஒரு நாள் மட்டும் திருமணங்கள் பரவலாக அதிகரித்துள்ளது. இறந்த பிறகு தங்கள் மூதாதையருடன் சென்று சேர வேண்டும் என்பதற்காக இப்படி இவர்கள் ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்களாம்.

அங்குள்ள வழக்கத்தின் படி ஏழையாகத் திருமணம் கூடச் செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஆண்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களைப் புதைக்க முடியாது.. இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்கத்தில் இருக்கச் சேர முடியாது என்பது அவர்களின் நம்பிக்கையாகும். இதனால் ஏற்படும் பாவம் பல தலைமுறைகளுக்குத் தொடரும் என அவர்கள் நம்புகிறார்கள்.என்ன காரணம்: சொர்க்கத்தில் மூதாதையருடன் இணைய வேண்டும் என்றால் ஆண்கள் அனைவரும் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும் என்பதை நம்புகிறார்கள். மேலும், அவர்கள் புதைக்கப்படும் போது சொர்க்கத்தில் தேவை என அவர்களுக்குப் பணத்தையும் தேவையான பொருட்களையும் கூட சேர்த்தே புதைக்கிறார்கள். இதன் காரணமாக அங்கு இதுபோல நடக்கும் ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்துள்ளது.

கடந்த 5, 6 ஆண்டுகளாக இதுபோல நடக்கும் ஒரு நாள் திருமணங்கள் அங்கே அதிகரித்துள்ளதாம்… முன்பு இங்கு உயிருடன் இருக்கும் நபர்கள் உயிரிழந்தோரைக் கூட இந்த சம்பிரதாயத்திற்காகத் திருமணம் செய்து கொள்வார்கள். அதற்குப் பதிலாக இப்போது இவர்கள் இப்படி ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இப்படி ஒரு நாள் திருமணத்திற்காகவே அங்குத் தனியாக கம்பெனி எல்லாம் இருக்கிறதாம்.பிரோக்கர் எல்லாம் இருக்கு: இது குறித்து ஒரு நாள் திருமணங்களை ஏற்பாடு செய்யும் தரகர் ஒருவர் கூறுகையில், “இப்போது இதுபோன்ற ஒரு நாள் திருமணங்கள் அதிகரித்துள்ளது. இதற்காகவே இங்குப் பல தொழில்முறை மணமகள்கள் உள்ளனர். அவர்களுக்கான கட்டணம் 3,600 யுவான் (ரூ.41,400) வசூலிக்கப்படும். இதுபோக எனக்குத் தனியாக கமிஷன் 1,000 யுவான் வாங்குவேன்.

இந்த வழக்கத்தின்படி இருவருக்கும் திருமணம் நடக்கும். அவருக்குத் திருமணம் நடந்து விட்டதை மூதாதையர்களுக்குக் காட்டும் வகையில் அவர்கள் குடும்ப கல்லறைக்குச் செல்வார்கள். இருப்பினும் உள்ளூர் பெண்கள் இப்படி ஒரு நாள் திருமணம் செய்து கொள்ளத் தயங்குகிறார்கள். இதனால் வெளியூர் பெண்களையே நான் ஒரு நாள் திருமணங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார்.பெண்கள்: ஏழை மற்றும் நடுத்தர பெண்களே இதுபோல ஒரு நாள் திருமணங்களுக்குச் சம்மதம் தெரிவிக்கிறார்களாம். திருமணமான பல பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் தான் இதுபோன்ற ஒரு நாள் திருமணங்களைச் செய்து வருகிறார்கள். இந்த திருமணம் எதுவுமே சட்டப்பூர்வமானது இல்லை. எல்லாமே வெறும் சடங்கிற்காகச் செய்யப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here