கனடா மெகா அறிவிப்பு.. 3 வருடத்தில் 14.85 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை..

கனடா-வில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் குறித்து கனடா குடியுரிமை அமைப்பு மற்றும் கனடாவின் மாநாட்டு வாரியம் முக்கியமான ஆய்வு நடத்தியது. இதில் கடந்த சில ஆண்டுகளில் கனடாவிற்கு புதிதாக சென்ற வெளிநாட்டவர்கள் அதிகமான அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக அந்நாட்டிற்கு குடியோறும் மக்களின் எதிர்பார்ப்பு, வாய்ப்புகள் கிடைக்காததும். கடந்த சில ஆண்டுகளாக அந்நாட்டில் உருவாகி வரும் மோசமான வீட்டு வசதி, கடினமான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வேலையின்மை போன்றவையும் முக்கிய பிரச்சனையாக இருப்பதால் கனடாவை விட்டு வெளிநாட்டவர்கள் அதிகமான அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக இந்த ஆய்வு கூறியது.

ஒருபக்கம் இந்த பிரச்சனைகளை மாற்றும் முயற்சிகளை ஜஸ்டின் ட்ரூடோ எடுத்து வரும் அதே வேளையில் அடுத்த 3 வருடத்திற்கு கனடா அரசு எத்தனை வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படுகிறது என்ற முக்கியமான திட்டத்தை வெளியிட்டு உள்ளது. இது அந்நாட்டில் குடியுரிமை பெற வேண்டும் என திட்டமிடுவோரை குஷிப்படுத்தியுள்ளது.

கனடா அரசு 2024-26 ஆம் நிதியாண்டுக்கான இமிகிரேஷன் லெவல் பிளான்-ஐ வெளியிட்டு உள்ளது. இதில் எந்த பிரிவில் எத்தனை வெளிநாட்டவரை கனடா அரசு குடியேற்ற உள்ளது என பட்டியலிட்டு உள்ளது. இந்த 3 வருட திட்டத்தில் முதல் வரும் 4.85 பேரையும், அடுத்த 2 வருடத்தில் தலா 5 லட்சம் வெளிநாட்டவர்களை எக்னாமிக், குடும்பம் மற்றும் மனிதாபம் பிரிவில் குடியுரிமை வழங்க உள்ளது. ஆக, அடுத்த 3 வருடத்தில் கனடா அரசு சுமார் 14.85 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை வழங்க உள்ளது.

மேலும் எக்ஸ்பிரஸ் பிரிவில் 2024 ஆம் ஆண்டில் 110,700 நிரந்தர குடியரிமையும், 2025 மற்றும் 2026ல் தலா 117,500 பேருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட உள்ளது. இதேபோல் Provincial Nominee Program கீழ் முதல் 2024ல் 110,000 பேருக்கும், 2025 மற்றும் 2026ல் தலா 120,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட உள்ளது.

இதோடு கணவன்/மனைவி, பார்னர், பிள்ளைகள் ஸ்பான்ஸ்சர்ஷிப் பிரிவில் முதல் ஆண்டு 82000 பேருக்கும், அடுத்த 2 வருடத்தில் 84000 பேருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட உள்ளது. மேலும் Parents and Grandparents Program (PGP) திட்டத்தின் கீழ் முதல் ஆண்டு 32000 பேருக்கும், அடுத்த 2 வருடத்தில் 34000 பேருக்கும் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட உள்ளது.

கனடா எப்போதும் இல்லாமல் அடுத்த 3 வருடம் அதிகப்படியான வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க முக்கியமான காரணம் வேகமாக வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக தான். மேலும் கனடா நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது வெளிநாடுகளில் இருந்து அங்கு குடியேறியவர்கள் தான். எனவே அதிகப்படியான மக்களை ஈர்க்க வேண்டும் என்ற திட்டத்தில் தீவிரமாக உள்ளது ஜஸ்டின் ட்ரூடோ அரசு.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times